வாழைச்சேனையில் ரீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் மௌலிவி ஒருவர் கைது

Share

(கனகராசா சரவணன்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுறியா நகரில் மெலவி ஒருவரை 30-07-2024 செவ்வாய்க்கிழமை இரவு இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் வாளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவ அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலன்னறுவ இராணுவப் புலனாய்வுப்பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து அதிரடிப்படை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணியுமான வருன ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு குறித்த மெலளவியின் வீட்டை சுற்றுவளைத்து சோதனையிட்டனர்.

இதன் போது வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரு ரீ 56 ரக துப்பாக்கி துப்பாக்கி ரவைகள் 59, மெகசீன் 2, பைனோ 1, வாள் 1 ஆகியற்கை கைப்பற்றியதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மௌலவியை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுவருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>