விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் “கர”

Share

ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ்வெஞ்சரமுடு, ஜெயராம் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கர”. 1990 ஆம் ஆண்டில் சென்னையில் ஓட்டை பிரித்து வீட்டில் திருடும் திருடனாக இருக்கிறார் தனுஷ். ஒருநள் திருடும்போது காவல்த்துறையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். பிறகு காவல்நிலையத்திலிருந்து தப்பித்து தனது காதலி மமிதா பைஜூவுடன் ஆந்திராவுக்கு தப்பித்து வருகிறார். ஆந்திராவிலுள்ள ஒரு சிறிய கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக தனுஷ்சும் மமிதா பைஜூம் ஒரு உணவகத்தில் வேலை பார்க்கிறார்கள். பல நாட்கள் இப்படியே கடந்தபோது  ஒருநாள் மமிதா பைஜூ, தனுஷிடம் நாம் சொந்தமாக ஒரு உணவகம் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். உணவகம் நடத்த வங்கியில் கடன் கேட்கிறார் தனுஷ். அதற்கு அடமானமாக ஏதேனும் ஒரு சொத்தின் பத்திரத்தை கேட்கிறார் வங்கி மேலாளர். அப்போது தனது சொந்த ஊரான இராமநாதபுரத்திலிருக்கும் 8 ஏக்கர்  விவசாய நிலத்தின் பத்திரத்தை தனது தந்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்க வருகிறார். நிலப்பத்திரம் உழவு வண்டி வாங்குவதற்காக வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக சொல்கிறார் ரவிக்குமார். அத்துடன் பல ஆண்டுகளாக மழையில்லாமல் பூமி வரண்டுகிடப்பதால் விவுசாயம் செய்யவில்லை என்றும் அதனால் வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலத்தில்தான் நான் இறந்தபிறகு எனது உடலை புதைக்க வேண்டுமென்றும் தன் மகன் தனுஷிடம் சொல்கிறார் ரவிகுமார். ரவிக்குமார் இறந்தபிறகு அவரின் உடலை அடக்கம் செய்ய அந்த நிலத்துக்கு வருகிறார்கள். அப்போது அந்த நிலத்தை ஜப்தி செய்ய வங்கி ஊழியர்கள் வருகிறார்கள். வங்கிக் கடனை அடைத்த பிறகுதான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். அதுவரை அரசு பிணவறையில் ரவிக்குமாரின் உடலை வைக்கிறார்கள். 8 நாட்களுக்குள் பிணத்தை வாங்காவிட்டால் அனாதை பிணமாக உடலை எரித்துவிடுவோம் என்று பிணவறை ஊழியர்கள் கூறிவிடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் வங்கிகடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க முயற்சிக்கிறார் தனுஷ். திட்டமிட்டபடி  வங்கியை கொள்ளையடித்தாரா? இல்லையா? அனாதை பிணமாக கிடக்கும் தந்தை ரவிக்குமாரின் உடலை அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்து மீட்டு தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. தனுஷின் அபார நடிப்பில் முத்திரை பதித்துவிட்டார். அனாதைப் பிணமாக தந்தை ரவிக்குமாரின் உடலை வீதியில் கிடத்தும் காட்சியில் தனுஷின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது. படத்தின் இறுதிவரை தனுஷ் நடிப்பின் உச்சம்தொடுகிறார். வங்கியை கொள்ளயடிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு நகர்த்துகின்றன. மமிதா பைஜி கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயல்பான யதார்த்தமான வயதின் முதுமைக்கேற்ற நடிப்பை அசால்ட்டாக கொடுத்துள்ளார். முதுமையின் வரையறையை எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்துள்ளார். நகைச்சுவையாளராகவும் உணர்ச்சிக் கொப்பளங்களை வெடிப்பதிலும் கருணாஸ் தனி இடத்தை பிடித்துள்ளார். படத்தின் உயிரோட்டத்துக்கு கருணாஸின் நடிப்பு உதவுகிறது. இயல்பான சினிமாத்தனம் பல இடங்களில் தன்பல்லை காட்டுகிறது. ‘போர்தொழில்’ படத்தில் காவலர்களை தூக்கிப்பிடித்த இயக்குநர் விக்னேஷ்ராஜா இப்படத்தில் திருடர்களை தூக்கிப் பிடித்திருக்கிறார். அத்துடன் இந்தவகை திருடனை நியாயத்தராசில் அமர்த்தி இருக்கிறார். குணச்சித்திர நடிகரான ஜெயராமனை வில்லன் கதாபாத்திரத்தில் மென்மையான வில்லனாக காட்டியிருக்குறார் இயக்குநர். ரசிக்கும்படி ஜெயராமும் நடித்திருக்கிறார். சுராஜ்வெஞ்சரமுடு, காவல் அதிகாரியின் அந்தரங்க ஆசைகளை உச்சக்கட்ட காட்சியில் தெளிவுபடுத்தி நடித்துள்ளார்.  மொத்தத்தில் கர திரைப்படம் தனுஷின் ரசிகர்களுக்கு விருந்து. மொத்தத்தில் வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார் இயக்குநர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>