விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது

Share

விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார். கடைசியாக வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சிறை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டாலும், எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார். இறுதியாக அறிமுக இயக்குநர் சித்தார்த்தின் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார். விக்ரம் பிரபு தனது 26ஆவது படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘சத்ரியன்’ (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>