விங் கமாண்டர்’ நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம் என்று தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் விமான சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். துபாய் ஏர்ஷோ 2025 இல் இந்திய விமானப்படை தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ச்சியில் கூடியிருந்த பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமான அதன் திட்டமிடப்பட்ட எட்டு நிமிட சாகசத்தைக் காட்டத் தொடங்கியது, ஆனால் திடீரென்று கீழ்நோக்கி விழுந்து தீப்பிடித்தது. சில நொடிகளிலேயே விமானம் விழுந்து பயங்கர வெடிப்பு ஏற்பட்டதால், விமானத்தை இயக்கிய இந்திய விமானி சரியான நேரத்தில் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.