விசில் புரட்சி உலக அளவில் தெரியபோகிறது- செங்கோட்டையன்

Share

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் வெளியான கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: மக்கள் தீர்ப்பு வேறு, கருத்து கணிப்பு வேறு. மக்கள் மனநிலை புரியாமல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். எப்போதுமே கருத்து கணிப்பு பொறுத்தவரையில் தலைவர், அம்மா காலத்தில் இருந்தே கருத்து கணிப்பிற்கும் வெற்றிக்கும் மாறுதலாக தான் இருந்துக்கிறது. இதே நிலைதான் இப்போது நிலவப்போகிறது. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சியை போல விசில் புரட்சி உலக அளவில் தெரியபோகிறது. 200 இடங்களில் த.வெ.க. வெற்றி பெறும். விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார். அவர் தான் நிரந்தர முதல்வர். இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>