விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் வெளியீடு ஆனது. இந்த நிலையில், தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று மறு வெளியீடு ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். சென்சார் பிரச்சனையால் ஜன நாயகன் வெளியாகாத நிலையில், தெறி படம் பொங்கலை ஒட்டி மறு வெளியீடு ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதையடுத்து புதிய படங்களின் வெளியீடால் தெறி படத்தின் மறு வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘தெறி’ படம் வரும் 27ம் தேதி மறு வெளியீடு ஆகிறது என்று தயாரிப்பாளர் தாணு பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
விஜயின் ‘தெறி’ படம் பிப்ரவரி 27ம் தேதி மறு வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>