விஜய்க்கு ஆதரவு… த.வெ.க.வில் இணைய வாய்ப்பு? – நடிகை வாணி போஜன் பேட்டி

Share

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலான நடிகை வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மிரள்’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது அதர்வாவின் ‘வலை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை உள்ளது?’ என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த வாணி போஜன், “எனக்கு விஜய்யுடன் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் அவர் நடிக்க வேண்டுமே” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிய நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ படத்தோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ‘சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். அவர் அரசியலுக்கு வந்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். என்னிடம் எல்லோரும், ‘நீங்கள் எப்போது த.வெ.க.வில் இணையப்போகிறீர்கள்?’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு அந்த எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து பிறகு சொல்கிறேன். இருப்பினும், தற்போது என்னுடைய ஆதரவு விஜய்க்குதான்” என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>