விஜய்யின் “திருப்பாச்சி” திரைப்படம் மீண்டும் அக்டோபர் 1ம் தேதி மறு வெளியீடாகிறது

Share

விஜய்யின் ‘திருப்பாச்சி’ திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடாகிறது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமானது. இதற்கு அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய், திரிஷா, மல்லிகா, பசுபதி, மனோஜ் கே ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் மணி ஷர்மா, தீனா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளனர். படத்தின் ஏழு பாடல்களையும், இயக்குனர் பேரரசு எழுத, கட்டுக் கட்டு… பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தும், கண்ணும் கண்ணும் பாடலை மணி ஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில் அன்னவரம், கன்னடத்தில் தங்கிகாகி என்ற பெயரில், மறுபதிப்பு செய்யப்பட்டது.  

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>