விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ படத்தின் பதாகை வெளியானது

Share

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் ‘பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தாலும், அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். அந்த வகையில், இருவரும் இணைந்துள்ள படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் முதல்காட்சி பதாகையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். பதாகையில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே மாதம் வெளியாக உள்ளதால் விரைவில் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>