விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் கதாபாத்திர அறிமுக பதாகை வெளியாகியுள்ளது

Share

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்போது ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பதாகையை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல்காட்சி வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘நூறு சாமி’ படத்தில் நடித்துள்ள நடிகர் அஜய் திஷானின் கதாபாத்திர அறிமுக பதாகையை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜய் திஷான் ‘பாஸ்கர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை லிஜோ மோல் ஜோஸ் ‘அஞ்செல்லா’ கதாபாத்திர கதாபாத்திர பதாகை, நடிகை காவ்யா அனில் ‘வந்தனா’ கதாபாத்திர பதாகை சமீபத்தில் வெளியானது. இப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>