விஜய் தனக்கு நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் – சங்கீதா

Share

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது: படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும்.

பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>