விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் கோலாகலம்

Share

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றது. இருப்பினும் அதிகாரப்பூர்வ விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>