விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்!

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>