சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் இயக்குநர் ஆவார். காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் “வித் லவ்” படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் விசேஷ பிரீமியர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த காட்சியில் படத்தை பார்த்தவர்கள் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் “வித் லவ்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“வித் லவ்” படத்தின் புதிய பதாகை வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>