விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் 15ம் திகதி புதன்கிழமைய அன்றையதினம் உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வலிங்கம் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும்
தெரியவருகையில்,

இவர் கடந்த 14ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதன்போது முள்ளியவளை நித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் இவர் வலது பக்கமாக துவிச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டவேளை பின்னால் இருந்து வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதி விபத்து சம்பவித்தது.

பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 15ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் (15) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>