விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டொனால்டு டிரம்ப்

Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.

விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>