விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 14 பேர் உயிரிழப்பு

Share

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பயங்கர வெடி விபத்து அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>