வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஜிப்ரான் இசையில் இப்படத்தில் முதல்காட்சி மாலை 6:05 மணிக்கு வெளியாகும் என்று விஷ்ணு விஷால் புரோமோ காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>