வீரபாண்டியில் ஜனவரி 4-ந்தேதி அதிமுக பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

Share

ஜனவரி 4-ந்தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

      அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  கிறார். இந்த நிலையில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-1-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 5-1-2026 (திங்கட்கிழமை) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>