வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பதற்றம்-பலர் கைது

Share
(மன்னார் நிருபர்)
(8-03-2024)

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் தினம் பூஜை வழிபாடுகளின் போது மாலை வேளையில் பதற்ற நிலை சற்று அதிகரித்திருந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் தாக்குதல் சம்பவமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பொலிஸார் மாலை ஆறு மணி யுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறு தெரிவித்திருந்தனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்த துடன் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது டன் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>