வெனிசுலாவில் சிறிய ரக விமானம் விபத்து – 2 பேர் பலி

Share

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர். இதுதொடர்பான காணொளி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>