வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘அரசன்’

Share

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை தீபாவளி வெளியீடாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் வெற்றிமாறன், சிம்பு மற்றும் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்தப் பதிவில் ‘அரசன் இன் ஆக்சன் மோட்’ என்று குறிப்பிட்டுள்ள சிம்பு, படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>