வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் மற்றும் அமீர் ஆகியோர் நடிக்க உள்ள ‘ராஜன் வகையறா’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘அரசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அரசன்’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள திரைப்படம் ‘ராஜன் வகையறா’. கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸ் மற்றும் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘ராஜன் வகையறா’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி மாறனின் ‘ராஜன் வகையறா’ படத்தில் சாய் அபயங்கர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>