வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படும் வடக்கு மாகாண இளைஞர்களின் பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு!

Share

பு.கஜிந்தன்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024 ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>