வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் உபகரணங்களை மூன்றாம் கட்டமாகவும் வழங்கிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி.

Share

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 3ஆம் கட்டமாக , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அர்ஷாத் நிஷாம்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் சமையலறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பெற்றன.

நிகழ்வில் மேலும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரியாஸ் கபூர், கொட்டிகாவத்தை பிரதேச சபை உறுப்பினர் சனீக், மற்றும் இம்ரான் நெய்னார் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>