வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறதென முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் நிதிநிலை அறிக்கையை திரும்ப படித்தது போல் இருந்தது. நான் 6 முறை வேளாண் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்றியிருக்கிறேன். இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கும்போது 7-வது முறையாக படிக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் அளித்த நிநிநிலை அகிக்கையில் மாற்றம் இல்லை. புதிய அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் வரி பிசகாமல் அப்படியே உள்ளன. திமுக ஆட்சியில் அறிவித்த அனைத்தும் தமிழக வெற்றி கழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்க திட்டமிட்டு இருந்தோம்; அதை அப்படியே அறிவித்து விட்டனர். 2 லட்சம் விசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மானாவாரி நில விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்த நிநிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறதென முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>