வைர வியாபாரி மெகுல் சோக்சியின் வழக்கறிஞருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது

Share

வைர வியாபாரி மெகுல் சோக்சியின் வழக்கறிஞருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இந்தியாவில் பஞ்சாப் நேசனல் வங்கியில் பல ஆயிரம் கோடி பணமோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இவருடைய வழக்கு விசாரணைக்காக ஆஜரானவர் விஜய் அகர்வால் (வயது 57). இந்தியரான விஜய் அகர்வால் மீது லண்டனில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து பல பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மே 26 மற்றும் ஆகஸ்டு 9 ஆகிய நாட்களில் அவர் இந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, ஆகஸ்டு 11-ந்தேதி காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அவருடைய உதவியாளர் மன்பிரீத் கவுருக்கும் (வயது 41) தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு பதிவானது. தவிர ஹர திப்ரிவாலா என்ற 3-வது நபரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். எனினும், இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கோர்ட்டில் அவர் கூறினார். அவருக்கு 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கியது. எனினும், நவம்பர் 6-ந்தேதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையில் 3 பேரும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>