ஸ்காபரோ போன்ற அதிக தேவை உள்ள பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் 130 இற்கும் மேற்பட்ட புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதன் மூலம் 300,000 பேரை முதன்மை பராமரிப்புடன் இணைக்க ஒன்ராறியோ அரசாங்கம் 235 மில்லியனை டொலர்களை அளிக்கிறது. இந்த முதலீடு, அதிகமான குடியிருப்பாளர்கள் ஒரு குடும்ப மருத்துவர் அல்லது செவிலியர் பயிற்சியாளரைப் பெற்றுக்கொள்ளும் வசதியை உறுதி செய்கிறது, காத்திருப்பு நேரங்களையும் அவசர மருத்துவ அறைகளின் நெருக்கடியையும் குறைக்கும். ஸ்கார்பரோ பொது மருத்துவமனையில் நோயினைக்க கண்டறியும் புதிய துறை மற்றும் ஸ்காபரோ மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அகாடமியில் (SAMIH) கட்டப்பட்டு வரும் முதல் மருத்துவப் பள்ளி போன்ற திட்டங்கள் மூலம் ஸ்காபரோ பெரிய சுகாதார மேம்பாடுகளையும் காண்கிறது.
“எங்கள் அரசாங்கம் மக்களை சிறந்த பராமரிப்பில் வைத்திருகிறது. ஸ்காபரோ குடும்பங்களுக்கு சிறப்பான மருத்துவர் வசதியை ஏற்படுத்தி, விரைவான நோயைக் கண்டறிதல்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் உயர்தர சேவைகள் இருப்பதை உறுதி செய்கிறது. ஸ்காபரோ குடியிருப்பாளர்களுக்கு தகுதியான சுகாதார சேவையை நாங்கள் வழங்குகிறோம்” என்று அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறினார். இந்த முதலீடுகள் சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும் மாநிலம் முழுவதும் வளர்ந்து வரும் சமூகங்களை ஆதரிப்பதற்கும் ஒன்ராறியோவின் துணிச்சலான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.