ஸ்காபுறோவில் வெளியிடப்பெற்ற ‘மனசாளும் கண்ணகி’ இசைத்தட்டு வெளியீட்டு விழா

Share

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் எழுந்தருளியுள்ள கண்ணகை அம்மனின் புகழ்பாடும் பக்தி மனம் கமழும் பாடல் வரிகளைக் கொண்ட ஸ்காபுறோவில் ‘மனசாளும் கண்ணகி’ இசைத்தட்டு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புங்குதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவருமான கவிஞர் கதிர் வசந்தரூபன் அவர்களின் பாடல்வரிகளுக்கு இனிதான இசையை வழங்கியவர் இசைப்பிரியன் ஆவார். இந்த விழாவை திரு சோம சச்சதிதானந்தன் தொகுத்து வழங்கினார். மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற இதில் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவாச்சாரியப் பெருமக்கள் மற்றும் பாஸ்டர் எஸ் ஜெயானந்தசோதி ஆகியோர் உட்பட பலர் அங்கு வாழ்த்துரை வழங்கினர்.

இசைத் தட்டின் பிரதிகளை நூற்றுக்கணக்கானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெற்று மகிழ்ந்தனர். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்   – சத்தியன்

 

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>