ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்யவில்லை – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Share

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 25 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பான சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: குழந்தைகள் இறப்பு நடந்து 25 நாட்களுக்கு பின்னர் தான் தமிழகத்திற்கு தகவல் கிடைத்தது. 25 குழந்தைகள் மரணம் தொடர்பான செய்தி கிடைத்ததும் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகவல் கிடைத்த 2 நாட்களில் சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.  சர்ச்சைக்குரிய இருமல் மருந்து அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை. இருமல் மருந்து விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சர்ச்சைக்குரிய மருந்து நல்லது என மத்திய பிரதேச அரசு சான்றிதழ் அளித்துள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 25 குழந்தைகள் பலியான காரணமாக ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் உரிமம் வழங்கப்பட்டது.  கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>