ஸ்ரீ கவுரி பிரியாவின் “சென்னை லவ் ஸ்டோரி” படத்தின் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலானது

Share

ஸ்ரீ கவுரி பிரியாவின் “சென்னை லவ் ஸ்டோரி” படத்தின் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலானது. ஸ்ரீ கவுரி பிரியா தெலுங்கில் நடித்துள்ள ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் ‘மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, ‘லவ்வர்’ திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‘பேபி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, எழுத்தாளரும் இயக்குனருமான சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்கேஎன் ஆகியோர் மீண்டும் காதல் திரைப்படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். சாய் ராஜேஷ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். ரவி நம்பூரி இயக்கியுள்ள இந்த படம் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ரீ கவுரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>