ரூ.2 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான ‘ஹனுமான் அன்ஷ்’ படம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் ரூ.381 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என பக்தர்களால் போற்றப்படும் ஆன்மிக குருவின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. முதல் வாரத்தில் ரூ.1.08 கோடியும், 2-வது வாரத்தில் ரூ.40 லட்சமும் மட்டுமே வசூலித்தது. ஆனால் 3-வது வாரத்தில் இருந்து படத்தின் வசூல் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்நிலையில், ‘ஹனுமான் அன்ஷ்’ படம் 50 நாட்களில் ரூ.381 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஹனுமான் அன்ஷ்” படம் ரூ.381 கோடி வசூலானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>