ஹற்றன் நேஷனல் வங்கியினால் மாங்குளம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை உபகரணங்கள் கையளிப்பு!

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்-முல்லைத்தீவு

யாழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வடமாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜொனதன் அலஸ் அவர்கள், இன்றைய தினம் காலை மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருக்கும் மாற்று திறனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்

நிகழ்வில் மாற்றுவலுவுள்ளோரின் தேவைப்பாடுகள் குறித்து கேட்டரிந்து கொண்ட ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி தன்னாலான ஒத்துழைப்புக்களை அவர்களுக்கு நல்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்

இதன் போது மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு 01 சக்கர நாற்காலியும் (wheel chair ) மற்றும் 02 காற்று மெத்தைகளும் (air mattresses) ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியினால் கையளிக்கப்பட்டன

நிகழ்வில் ஹற்றன் நேஷனல் வங்கி வடமாகாண செயல்பாட்டு முகாமையாளர் திரு நிஷாந்தன் கருணைராஜ் மற்றும் மல்லாவி வங்கிக் கிளையின் முகாமையாளர் திரு அமிர்தலிங்கம் அமிர்தசொருபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>