‘ஹார்டின்’ என் திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதென நடிகர் சனந்த் பெருமிதம்

Share

‘ஹார்டின்’ என் திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதென நடிகர் சனந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹார்டின்’.  காதல் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சனந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சனந்த், ‘ஹார்டின்’ என்பது உணர்ச்சிகள் நிறைந்த, பல பரிமாணங்களைக் கொண்ட அழகான காதல் திரைப்படம். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்த அனுபவம், உண்மையான காதலை அனுபவித்தது போன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது. அந்த அனுபவம் இந்தப் படத்தின் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது” என்றார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு கதாநாயகனாக நான் நடிக்கும் முதல் முழுநீளத் திரைப்படம் இதுதான். அதனால் என் திரைப்பயணத்தில் ‘ஹார்டின்’ ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தப் படம் என் இதயத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. ரசிகர்களும் இந்த காதல் கதையை நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார். இப்படம் ஜூன் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>