ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. ஈரான் மீது போரைத் தொடங்கியதில் இருந்து, உலக அளவில் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், மற்றொரு பக்கம் மீண்டும் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஓமனுடன் சேர்ந்து கூட்டாக நிர்வகிக்க இருப்பதாக ஈரான் முன்மொழிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது குறித்த ஈரானின் முன்மொழிவை நிராகரிக்கிறேன். ஓமனும் மற்றவர்களைப்போலவே நடந்துகொள்ளும். இல்லையென்றால், நாம் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக ஓமனுக்கு டிரம்ப் எச்சரித்துள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>