ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேயென டிரம்ப் அதிரடியாக பேசினார்

Share

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேயென டிரம்ப் அதிரடியாக பேசினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலகளாவிய எண்ணெய் வினியோகத்தில் முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது. ஈரானுடனான போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உலகளாவிய எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உர வினியோகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், “ஈரானை முழுமையாகத் தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்க உள்ளேன். இந்த முற்றுகை ஊடுருவ முடியாதது. இது உலக நாடுகளுக்குச் செய்யப்படும் ஒரு சிறந்த சேவை” என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>