ஈரான்-அமெரிக்கா இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது உலக நாடுகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஹார்முஸ் நீரிணையை திறக்கவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் வலியுறுத்தி இருக்கிறது. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் காணொலி மூலம் நடத்திய அவசர மாநாட்டில் இந்த கோரிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, ‘அனைத்து நாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்கவும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கவும். பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், துன்பங்களையும் உயிர் இழப்புகளையும் தடுத்தல், கடல்சார் பாதுகாப்பு, கப்பல் மற்றும் வான்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட போர் நிறுத்தத்தை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்துமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட 2-வது மாநாடு இதுவாகும்.
ஹார்முஸ் நீரிணையை திறக்க ஆசியான் அமைப்பு வலியுறுத்தல்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>