ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தை பாதித்து இருக்கிறது. எனவே இந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய திட்டம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார். அதன்படி, அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தொடர்வதோடு, எரிசக்தியின் தடையற்ற வினியோகத்தைச் சீர்குலைக்கும் ஈரானின் முயற்சிகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதற்காக அதன் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ஈரானை வழிக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு ராஜதந்திர மற்றும் கொள்கை வழி முறைளையும் அவர் பரிசீலித்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.
ஹார்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் புதிய திட்டம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>