ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த கட்டணம் கட்டாயமாக்கபடுமென ஈரான் அமைச்சர் அறிவித்துள்ளார்

Share

சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் முழுமையான கூட்டு இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்றும், இனிவரும் காலங்களில் இந்த கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் அனைத்து சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>