ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது

Share

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் இந்த வழித்தடத்தைக் கடக்கக்கூடாது என்றும், மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், உத்தரவை மீறி ஹார்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் தாக்கப்பட்ட அந்த இரண்டு கப்பல்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை, அவற்றின் பெயர் என்ன மற்றும் அதில் உள்ள மாலுமிகளின் நிலை குறித்து தற்போதைக்கு எந்த விவரமும் வெளியாகவில்லை. ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு கப்பலும் எதிரிக்கு ஒத்துழைப்பதாகக் கருதப்பட்டு தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மறுபுறம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பதை அமெரிக்கா தரப்பு மறுத்துள்ளது. மேலும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித அமைதி உடன்படிக்கையையும் எட்ட முடியாது என ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>