இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: “எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஆனால் அந்த குழுவைக் கலைக்கும் பணியை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.” போதும், இதுவே போதும்.. என்று கூறி, லெபனான் மீது இனிமேலும் குண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாக டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்த சிறிது நேரத்திலேயே நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>