ஹோண்டுராஸ் நாட்டில் துப்பாக்கி சூடு – 25 பேர் உயிரிழப்பு

Share

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில், ஹோண்டுராசின் டுரிஜிலோ நகரில் உள்ள தோட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் தோட்ட தொழிலாளர்கள் 19 பேர் உயிரிஅந்தனர். அதேபோல், அந்நாட்டின் கொர்டஸ் மாகாணம் ஒமியா நகரில் காவல்துறை வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 6 காவலர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் ஹோண்டுராசில் ஒரேநாளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>