கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மற்றும் யுகம் வானொலி நிலையத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் கனடா- ஸ்காபுறோ நகரில உள்ள’யுகம் வானொலி’ கலையகத்தில் சந்தித்துக் சில முக்கிய விடயங்கள் பற்றி உரையாடினார்கள்.
அவர்கள் இருவரும் அங்கம் வகிக்கும் ‘கனடா பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் பலமொழி சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் எதிர்நோக்கும் தடைகள் பற்றி இரு ஊடகவியலாளர்களும் மனந்திறந்து உரையாடினார்கள்.
மற்றும் எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி நடைபெறவுள்ள யுகம் வானொலி ஆதரவில் கனடிய தமிழ்க் கலைஞர்கள் குழு நடத்தும் ‘நாடகப் பெருவிழாவைப் பற்றியும் அதே மாதம் டிசம்பர் 13ம்திகதி நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலை விழா-2025 தொடர்பாகவும் பரஸ்பரம் தங்கள் தேவைகள் பற்றியும் உரையாடினர்.
இங்கே காணப்படும் படங்கள் யுகம் வானொலியின் கலைக்கூடத்தில் எடுக்கப்பெற்றவை.