13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என யாழ்ப்பாணத்தில் மைத்திரி தெரிவிப்பு

Share

இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்றைய முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர்களைச் சாந்தித்தபோது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பதின்மூன்றாவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்ற நிலையில் அது அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதய அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஆகவே நாங்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பொது நூதகத்திற்கு விஜயம் செய்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூலகத்தின் பல பகுதிகளைப் பார்வையிட்டதுடன் அங்கு கூடியிருந்த பணியாளர்களுடன் சினேகா பூர்வமாகக் கலந்துரையாடினார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தகாம் சிறிசேனா, அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் சிவராம் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>