15.000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை மட்டக்களப்பில் இலங்கையின் அபிவிருத்தி அமைச்சர் ஆரம்பித்துவைத்தார் !!

Share

(கனகராசா சரவணன்)

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக கடன் வழங்கும் திட்டம் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் 100 சுயதொழில் முயற்சியாளருக்கு கடன் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் 30ம் திகதி அன்று வியாழக்கிழமை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்,தனஞ்சயன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சதா சுபாகரன் கலந்து கொண்டனர்.

இதன் போது தங்கள் மீது நம்பிக்கை கொண்ட சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சோந்த தெரிவு செய்யப்பட்ட 100 தொழில் முயற்சியாளர்களுக்கான
கடன் தொகைக்கான காசோலைகள் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதன் போது தேசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளினால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>