குரு ஶ்ரீமதி பொன்மதி பத்மவரதனின் ‘பொற்சதங்கை கலைக்கூடம் வழங்கிய அழகிய 15வது ஆண்டு விழா!
ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மையத்திற்கு 10000 டாலர்களை வழங்கி ஒரு முக்கிய பங்காளிகளாக மாறிய குருவின் குடும்பத்தினர், மாணவச் செல்வங்கள் மற்றும் அவர் தம் பெற்றோர்!
நிறுவனரும் குருவுமாகிய ஶ்ரீமதி பொன்மதி பத்மவரதன் அவர்களில் நிர்வாகத்தில் இயங்கும் ரொறன்ரோ ‘பொற்சதங்கை கலைக்கூடம் கடந்த3ம் திகதி சனிக்கிழமை யோர்க்வுட் நூலக கலாச்சார மண்டபத்தில் வழங்கிய அழகிய 15வது ஆண்டு விழா ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி ஒரு நிகரற்ற நடன விழாவாகவும் பெற்றோர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் நடன விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சங்கமித்த ஒரு தமிழர் நிகழ்வாகவும் இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது.!
அத்துடன் அன்றைய தினம் சமூக அக்கறையோடு ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மையத்திற்கு 10000 டாலர்களை ஒன்றிணைந்து வழங்கி ஒரு முக்கிய பங்காளிகளாக மாறிய குருவின் குடும்பத்தினர், மாணவச் செல்வங்கள் மற்றும் அவர் தம் பெற்றோர் ஆகியோர் தங்கள் தனித்துவத்தை நிரூபித்த நிகழ்வாகவும் அன்றைய மாலை அமைந்தது!
அன்றைய ஆண்டு விழாவிற்கு நடன ஆசிரியை ஶ்ரீமதி சித்திரா தர்மலிங்கம் அழைக்கப்பெற்றிருந்தார். அத்துடன் ‘;அறிவகம்’ தமிழ்க் கல்லூரி மற்றும் பிரதான அனுசரணையாளர்களான பிரம்ரன் லீலா சுப்பர் மார்க்கட் நிறுவன உ ரிமையாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த ஒரு விழாவாக 15வது ஆண்டு விழா திகழ்ந்தது. கவிஞர் கஜேந்திரன் சண்முகநாதன் அழகாகத் தொகுத்து வழங்கினார். ஆங்கில அறிவிப்புக்களை செல்வன் சதுர்சிகம் சுமந்திரன் நிகழ்த்தினார்.
இவ்வாண்டுக்குரிய ஆண்டு விழாவில் குரு பொன்மதி பத்மவரதன் அவர்களும் பெற்றோர் மற்றும் மாணவ மணிகளும் அதிக கவனம் எடுத்து நடன உடை அலங்காரத்திலும் அதிகம் கவனம் எடுத்து விழாவை நடத்திய நடனங்களின் தரமும் மேடையின் அழகும் இணைந்து சபையோருக்கு கண்கொள்ளாக் காட்சிகளாக விளங்கிய ஒவ்வொரு நடன உருப்படியும் அவர்கள் மண்டபத்தை விட்டு விலகிச் சென்றாலும் அவர்கள் மனங்களில் நீண்ட நாட்களுக்கு காட்சிகளாக நிலைத்து நிற்கும் பெருமையை பெற்றன என்பது சபையோரின் கருத்தாக விளங்கியது.
மொத்தத்தில் குரு ஶ்ரீமதி பொன்மதி பத்மவரதனின் ‘பொற்சதங்கை கலைக்கூடம் வழங்கிய அழகிய 15வது ஆண்டு விழா சபையில் அமர்ந்திருந்த அனைவரையும் குறிப்பாக பிரதம விருந்தினர் உட்பட ஏனை நடன ஆசிரியைகளுக்கும் பெரும் விருந்தாக அமைந்திருக்க வேண்டும் என்பதும் பிரதம விருந்தினரின் உரையிலிருந்து சபையோர் அறிந்து கொண்ட ஒரு விடயம் எனலாம்.
ஒரே கூரையின் கீழ் தங்கள் நடனப் பள்ளியின் அபார உழைப்பையும் குருவின் திறமையும் மாணவ மணிகளின் குரு பக்தியையும் பெற்றோரின் மானசீகமான ஆதரவையும் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவை நிரூபிக்கும் ஒரு தமிழர் விழாவாகவும் அத்துடன் தமிழ் சமூக மையத்தின் கட்டட நிதி வழங்கிய பெருமையும் மகிழ்ச்சியும் மிக்கவர்களாக அனைவரும் இல்லம் ஏகினர்.
இவ்வருடத்தின் விழாவிற்கு தங்கள் ஆதரவை வழங்கிய வர்த்தக நிறுவனங்களான லீலா சுப்பர் மார்க்கட், சுவர்ண மஹால் காஞ்சிபுரம் சேலைகள், நந்தா உணவகம் ,நித்தியா தையலகம்
அழகுக்கலை நிபுணர் ஹரிணி ஆகியோர்க்கும் நன்றி தெரிவிக்கப்பெற்றது.