பு.கஜிந்தன்
நேற்றையதினம் மாலை வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி
கலை பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவ் மாணவி தமிழ் , புவியியல் , சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 283 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>