கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ, 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணங்கள் தொடர்பான தகவலை வாடிகன் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொனாக்கோ, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்குவடோரியல் கினியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் போப் லியோ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் போப் ஆண்டவராக லியோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2025-ம் ஆண்டில் வாட்டிகனுக்கு வந்த சுமார் 3 கோடியே 30 லட்சம் யாத்ரீகர்களுக்கான பிரார்த்தனை கூட்டங்களை நடத்துவதற்காக அவரது சுற்றுப்பயணம் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, 70 வயதான போப் லியோ தனது சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தற்போது தயாராகி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>