2036-க்குள் 1.5 லட்சம் கோடி பொருளாதார இலக்கென அமைச்சர் கீர்த்தனா கூறினார்

Share

2036-க்குள் 1.5 லட்சம் கோடி பொருளாதார இலக்கென அமைச்சர் கீர்த்தனா கூறினார். சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:  மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழக ஆட்சியமைத்த 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. 2036-ம் ஆண்டுக்குள் 1.5 அமெரிக்க டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நிர்ணயம் செய்துள்ளார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு. 21 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் பரிமாணங்கள் இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக மாற்றப்பட உள்ளது. திறமையும் மனித வளமும் தமிழகத்தில் குவிந்துள்ளது. இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எங்களுடைய பாதையை காட்டுகிறது. ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>