விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பி பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 வீரர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது. அந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் விண்வெளிக்கு சென்ற அதே விண்கலத்திலேயே பூமிக்கு வர திட்டமிட்டனர். ஆனால், அந்த விண்களத்தில் விண்வெளி குப்பை மோதியதால் சிறு விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்களை பூமிக்கு கொண்டுவர மற்றொரு விண்கலத்தை சீனா ஏவியது. அந்த விண்கலம் சர்வதேச விண்கலத்தை அடைந்ததையடுத்து அதில் 3 வீரர்களும் ஏறி பூமி திரும்பினர். இந்நிலையில், 214 நாட்கள் விண்வெளியில் தங்கிய 3 சீன வீரர்களும் நேற்று பூமி திரும்பினர். மங்கோலியாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் விண்கலம் தரையிறங்கியது. பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
204 நாட்களுக்குப்பின் பூமி திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>